(சக்தி)
பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்தியினை முன்னிட்டு இன்று (13) வியாழக்கிழமை
மட்.பட்டிருப்பு களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலையில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பாடசாலை சேமிப்பு அலகு ஒன்று திறந்து வைக்கபட்டது.
பாடசாலை அதிபர் பொன்.வன்னியசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய பொது முகாமையாளர் டி.ரி.எம்.எஸ்.குமார மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம், களுவாஞ்சிகுடி கிளை முகாமையாளர் ஜே.கே.பிரான்சிஸ், மற்றும் மட்டக்களப்பு மவட்டத்திலுள்ள வங்கிகளின் முகாமையாளர்கள் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இப்பாடசாலையில் இன்று திறக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி வங்கியின் பாடசாலை சேமிப்பு அலகிற்கு இப்பாடசாலையில் வர்த்தகப் பிரிவில் கல்வி பொதுத் தர உயர்தரத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் முகாமையாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளதாகவும். இன்றயத்தினம் மாத்திரம் 39 மாணவர்கள் தமக்குரிய சேமிப்புக் கணக்குகளை திறந்து ஆரம்பித்துள்ளதாகவும் தெடர்ந்து இந்த அலகு சிறந்த முறையில் இயங்கும் எனவும், மாணவர்கள் சேமிப்பதற்கு வேறு இடங்களை நாடிச் செல்ல தேவையில்லை அதற்குரிய வசதி வாயப்பக்கள் பாடசாலையில் இன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் பாடசாலை அதிபர் பொன்.வன்னியசிங்கம் தெரிவித்தார்.
இதன்போது சேமிப்பினை ஆரம்பித்த மாணவர்களுக்கு வங்கி அதிகாரிகளினால் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment