(வரதன்)
மட்டு மாவட்டத்தில் முதல் தடவையாக செலான் வங்கியின் அனுசரணையுடன்
வின்சென்ற்தேசிய பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வினைத் திறனுடையதாக்கி
முன்னெடுப்பதற்கு வாசிகசாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டது.
மட்டு செலான் வங்கியின் நகரக்கிளையின் முகாமையாளர் திருமதி பத்மசிறி
இளங்கோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செலான் வங்கி கிழக்குப்
பிராந்திய முகாமையாளர் கே. சிவஞானமுத்து மற்றும் வங்கியின் பிரதி வங்கியின் உயர் அதிகாரிகள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு வாசிகசாலையைத் திறந்து வைத்தனர்.
மதத்தலைவர்களின் ஆசியுரையைத் தொடர்ந்து செலான் வங்கியினால் 2இலட்சம்
ரூபா பெறுமதிமிக்க வாசிகசாலை உபகரணங்கள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டன.பாடசாலை மாணவர்களின் நிகழ்வில் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment