(சக்தி)
இரவு
நித்திரைக்கு சென்ற பிள்ளை மறுநாள் காலையில் எழும்ப வில்லை. உடல் முழுவதும் நீல நிறமான நிலையில் வீட்டினுள்ளே உயிர் இழந்துள்ள சம்பவம்
ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பரிவுக்குட்பட்ட மகிழூல் கடந்த
27 அன்று இடம் பெற்றுள்ளது.
இந்த
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
புதன்கிழமை
இரவு நித்திரைக்கு சென்ற பிள்ளை நேற்று வியழக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் சிறு நீர் கழிப்பதற்காக வெளியில்
சென்று வந்து மீண்டும் நித்திரை செய்துள்ளார். நித்திரை செய்த இவர் காலை ஏழு மணியாகியும்
எழும்பாத நிலையில் அவரின் தாயார் நித்திரை அறைக்கு சென்ற வேளை உடம்பு முழுவதும் நில
நிறமாக எந்த எந்தவித உணர்வும் அற்ற நிலையில்
காணப்பட்டதனை அடுத்து களுவாஞ்சிகுடி ஆதாரவைத்திய சாலைக்கு எடுத்து சென்ற வேளை பிள்ளை
இறந்து விட்டதாகை வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம்
தொடர்பாக களுவாஙஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம்-சுகுணன்
அவர்களிடம் கேட்டபோது.
நோயளியை
கொண்டுவரும் போதே இறந்த நிலையில் காணப்பட்டதாகவும்
இவ் இறப்பு சம்பவம் விசத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பிரேத பரிசோதனையின்
பின்பே அதனை உறுதிப்படுத்தி கூற முடியும் எனவும் தெரிவித்தார்.
இச்
சம்பவத்தில்; 22 வயதினையுடைய கங்காதரன்-மாதுமி என்பரே உயிரிழந்தவர் ஆவார் இவர் களணி
பல்கலைக் கழத்திற்கான அனுமதி கிடைத்துள்ளதுடன் கற்கை நெறியினை தொடர்வதற்கு தயாரான நிலையில்
இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேதம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதார
வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment