ஒரு வகையான விஷஜந்து தீண்டியதாகச் சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கப்போடி ஞானமுத்து (வயது 50) என்பவர் மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஞாயிற்றுக்கிழமை (02) காலை கொண்டுவந்தபோது இவர் மரணமடைந்து காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாலையடிஇ வட்டையிலுள்ள வயலில் சனிக்கிழமை (01) இரவு யானைக் காவலில் ஈடுபட்டிருந்த இவரை பாம்பு கடித்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனையின் பின்னரே இவர் பாம்புக் கடிக்குள்ளானாரா என்பது தொடர்பில் தெரியவருமெனவும் அவர் கூறினார்.
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment