6 Mar 2014

களுவாஞ்சிகுடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் சித்திரபீட வார வழிபாட்டு

SHARE
(கமல்)
களுவாஞ்சிகுடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் சித்திரபீட வார வழிபாட்டு மன்றத்தின் 14 வது ஆண்டு நிறைவு விழா திங்கட் கிழமை மாபெரும் நடைபவனியுடன் ஆரம்பமானது. இதில் பெருந்திரளான பக்தரகள் கலந்து கொண்டனர்
காலை 7 மணிக்கு அன்னைக்கு பூஜை வழிபாடும் பாத பூஜையும் இடம் பெற்று அதனைத்தொடர்து அன்னையின் திருவுருவப்படம் பக்தர்களால் வீதி உலா எடுத்து செல்லப்பட்டது.

அதன்பின்னர் அருள்திரு பங்காரு அடிகளாரின் 74 வது அவதார திருநாளை முன்னிட்டு 74 தீபங்கள் ஏற்றல் நிகழ்வும் பிறந்தநாள் கேக் வெட்டுதல் நிகழ்வும் இடம் பெற்று அதன்பின்னர் சமயச் செற்பொழிவுகளும் இடம் பெற்றது.

மேலும் பிறந்த தினத்தினை முன்னிட்டு அன்னதான நிகழ்வு இடம் பெற்றதுடன் ஏழை மாணர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது. ஏனைய பல உதவிகளான மூக்கு கண்ணாடி மற்றும் அடிப்படை வசதிக்கு தேவையான பொருட்கள் என பல உதவிகள் இந் நிகழ்வின் போது வறியவர்களுக்காக வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் ஆண்மீக அதிதியாக சிவசிறி மு.முத்துக்குமார் அவர்களும் ககலந்து சிறப்பித்து இருந்தனர்





SHARE

Author: verified_user

0 Comments: