21 Mar 2014

கிராமத்தினுள் புகுந்த காட்டுயானையினால் மக்கள் அல்லோலம்

SHARE
(சக்தி) 
கிராமத்தினுள் புகுந்த காட்டுயானை ஒன்றினால் மக்கள் அல்லோல கல்லோலப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை(19)  இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.

மட்டக்களப்பு மாட்டத்தின படுவாக்கரைப் பகுதியில் அமைந்துள்ள இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தினுள் நேற்று இரவு 9 மணியளவில் புகுந்த காட்டு யானை ஒன்றினால் (தனியன் யானை) மக்கள் பீதியடைந்து அல்லோல கல்லோலப்பட்டதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிராமத்தினுள் பகுந்த காட்டு யானையினை துரத்துவதற்கு முற்பட்டபோதும் யானை அப்பகுதியிலுருந்த மரவள்ளி மற்றும் தென்னை, வாழை போன்ற பயிரினங்களை அழித்துள்ளதாகவும், பின்னர் கிராம மக்கள் ஒன்றுகூடி பட்டாசு கொழுத்தியும், சத்தம் எழுப்பியும் தீப்பந்தங்கள் கொழுத்தியும் ஒருவாறு நேற்றிரவு சுமார் 11.30 மணியளிவில் கிராமத்தினை விட்டு யானையினை வெளியேற்றியதாகவும் கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நேற்று இரவு போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள 39 ஆம் கிராமம், திக்கோடை, மற்றும் களுமுந்தன்வெளி கிராமத்தினுள்ளும் காட்டு யானைகள் புகுந்ததினால் அப்பகுதி மக்களும் பீதியடைந்ததாக அப்பகுதிவாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசங்கள் மிக அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்








.

SHARE

Author: verified_user

0 Comments: