14 Mar 2014

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் மகளீர் தினத்தையொட்டி டைபெற்ற நிகழ்வு

SHARE
(சக்தி)

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் மகளீர் தினத்தையொட்டி கடந்த 9 ஆம் திகதி மாபெரும் பேரணியும் மகளீர் தினநிகழ்வும் இடம்பெற்றது. 
மட்டக்களப்பு நகரில் அரசடி ஜீவி வைத்தியசாலை முன்றல், புனிதமிக்கேல் கல்லூரி முன்றல், இருதயபுரம் முற்சந்தி ஆகிய மூன்று பிரதான இடங்களில் இருந்து நடைபவணி இடம் பெற்று மட்டககளப்பு இந்துக் கல்லூரி மைதானத்தை வந்தடைந்து அங்கு நிகழ்வுகள் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் சுவர்ணலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன், அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை பொலநறுவை கேகாலை போன்ற பிரதேசங்களில் இருந்தும் அதிகளவில் பெண்கள் வருகைதந்திருந்தனர். 
குறிப்பாககாவியா, சூர்யா, செழுமை, பெண்களுக்கான அபிவிருத்தி வலுவூட்டல் சம்மேளனம், கிராமிய அபிவிருத்தி திட்ட அமைப்பு, விழுது, போன்ற பெண்கள் அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.
இம் மகளீர்  தினசிறப்பு நிகழ்வை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டசுமார் 46 அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வேற்புநடனம், பெண்களின் சமூகபிரச்சினை தொடர்பான பாடல் மற்றும் விழிப்பூட்டல் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
“பெண்களின் பிரச்சினைகள் சமூகபிரச்சினையே, அனைத்து துறைகளிலும் பெண்கள் தலைமைத்துவம், பெண்களின் உரிமைக்காக இணைந்து ஒன்றுபடுவோம், பெண்களுக்கு எதிரானவன் முறைகளை இல்லாது ஒளிப்போம், போன்ற கருத்துக்கள் நடைபவணியில் சுலோகங்கள் ஏந்தியவண்ணம் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.









SHARE

Author: verified_user

0 Comments: