(சக்தி)
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி வீரபத்திரர் ஆலயத்திற்கு முன்பாக கார் வண்டி ஓன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்று மாலை (04) விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வேளையிலையே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இச் சம்பவம் தொர்பாக மேலும் தெரியவருவதாவது.
கார் வண்டி ஒன்று மட்டக்களப்பு இருந்து கல்முனைக்கு சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென களுவாஞ்சகுடி வீரபத்தரர் ஆலயத்திற்கு முன்பாக வீதியை குறுக்கீடு செய்துள்ளது. இதன் போது கார் சாரதி செய்வதறியாது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் நபரினைக் கருத்தில் கொண்டு செயற்பட்டதன் விளைவாக வீதியோரத்தில் உள்ள கால்வாய் கட்டினை ஒன்றினை உடைத்துக் கொண்டு அருகிலுள்ள வளவொன்றினுள் புகுந்துள்ளது.
இதன்போது காரில் பயணித்த சாரதியுட்பட இருவர் காரில் பொருத்தப் பட்டுள்ள காற்று பைகள் (எயார் வேக்) இரண்டும் வெளிவந்ததன் பயனாக இருவரும் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இந் நிலையில் மோட்டர் வண்டி சாரதி செய்வதறியாமல் அவ்விடத்தில் தரித்து நிற்காமல் தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து போலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
கார் விபத்துக்குள்ளாகி புகுந்த இடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.மு.இராசமாணிக்கம் அவர்களின் உருவச் சிலை அமைந்துள்ள வளாகத்திலேயே ஆகும். இதனால் சிலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment