(சக்தி)
ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் சேவ்த சில்ரண் சேமிப்புக்கான சிறுவர்கள் அமைப்பின் அனுசரணையுடனும் மட்டக்களப்பு கிருஸ்தவ இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேசமகளிர் தினசிறப்பு நிகழ்வு அமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.பயஸ் அவர்களின் தலைமையில் வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாழைக்காலை பாலர் பாடசாலை முன்றலில் நேற்று முன்தினம் (08) நடைபெற்றது.
இந்நிகழ்வில்; சேவ்த சில்ரண அமைப்பின் பால் நிலை உத்தியோகத்தர் திருமதி. எஸ்.லாவண்யா, நிகழ்ச்சித்திட்ட வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி.பி. பிரசாந்தி கொத்தியாபுலை, இலுப்படிசேனை, வாழைக்காலை, வவுணதீவு, காஞ்சிரங்குடா, போன்ற பிரதேசங்களின் மாதர் சங்க உறுப்பினர்களும் பொதுமக்களுமாக சுமார் 130 பேர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது மகளிர்தின பேரணி பெண்களின் “உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்” எனும் கருப்பொருளிள் கிழ் பதாகைகளை ஏந்தியவாறு பெண்கள் பிரதான வீதியிலிருந்து வாழைக்காலை பாலர் பாடசாலைவரை பேரணி சென்றனர்.
பெண்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து பொருளாதார மேன்பாட்டில் பங்கு கொள்வதற்கு நாம் போராட்டுவோம், வேலையை தேடுவதற்காக வழிமுறைகளை காட்டுவதன் மூலம் இளம்பெண் பிள்ளைகளின் பொருளாதாரத்தை உயர்த்துவோம், போன்ற கருத்துக்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியாறு பேரணி இடம்பெற்றது.
பின்னர் பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாகவும், செழிப்பாகவும், வளரவேண்டும் என்பதற்காக மரக்கன்றுகழும் நட்டுவைக்கப்பட்டதுடன் பெண்களின் உரிமைகள் தொடர்பான சிறப்பு கலை நிகழ்வுகளும் மகளிர் தின பாடல்கள், நாடகங்களும் கருத்துரைகளும் இதன்போது இடம்பெற்றன.
இதேவேளை மேற்படி அமைப்பின் ஏற்பாட்டில் ஆயித்தியமலை மணிபுரம் பாடசாலையிலும் மகளிர் தினநிகழ்வுகள் அன்றய தினம் சிறப்பான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment