(வரதன்)
கிழக்கு பல்கலைக் கழகத்தினால் முன்னெடுக்கப்படும் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றி ஊடகங்களுக்கும் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கிழக்குப்பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பில் அமைந்துள்ள மருத்துவ வளகத்தில் இடம் பெற்றது.
கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சமூகம் தன்மீது வீண் குற்றம் சுமத்த முயலுகின்றனர் கடந்த 3 தசாப்தங்களுக்கு பின்பு கிழக்கு மாகாண பல்கலைக்கழக செயற்பாடுகள் பாரிய வளர்ச்சி கண்டுயுள்ளாதாகவும் அதனை பார்க்க முடியாத சில குழுக்கள் வேண்டுமென்று தன்னுடன் இணைந்து செயற்படுபவர்களின் மீதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறான நீதியற்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் கி.ப.கழக உபவேந்தர் இங்கு தெரிவித்தார்.
தனது முயற்சியினால் பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட ஊழல் முற்றாக தடுத்து நிறுத்தப் பட்டுள்ளதாகவும் தடைப்பட்டிருந்த கட்டிட வேலைகள் முன்னெடுத்து வருவதாகவும் புதிய கற்கை நெறிகள் பல ஆரம்பிக்க பட்டுள்ளது.
விரைவில் பொறியியல் பீடம் தொடங்கவுள்ளேம். இவற்றையெல்லாம் முன்னெடுக்கப்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்; இவ் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment