13 Mar 2014

தமிழ் மாணவர்களிடையே கலையை வளர்ப்பதற்காக கிறுக்கல் சித்திரத்தில் உருவம்

SHARE

(துசாந்தன்)

தமிழ் மாணவர்களிடையே கலையை வளர்ப்பதற்காக கிறுக்கல் சித்திரத்தில் உருவம் எடுத்துகவிதை இயற்றல் தொடர்பான பயிற்சிப் பட்டறை மணடமுனை தென் மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய் கிழமை (11) பிரதேச கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா-வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இதில் மாணவர்கள் எவ்வாறு கிறுக்கல் சித்திரத்தில் உருவம் எடுத்து கவிதை வரைதல் என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்களும் வழங்கப்பட்டது. இதில மட்.அரசடித்தீவு விக்கினேஸ்வரா வித்தியாலயம்இ  மட்.அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி  வளர்மதி-ராஜ்இ கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் த.மேகலாஇ மு.ஜெயந்தா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இப் பயிற்சி பட்டறையானது தொடர்ந்தும் எதிர் வரும் 13ஆம் திகதி இப்பிரதேசத்தில் அமைந்துள்ள மட்.மவடிமுன்மாரி பாடசாலையில் மாவடிமுன்மாரிஇ நாற்பதுவட்டைஇ கொல்லனுலைஇ ஆகிய பாடசாலை மாணவர்களுக்கும்இ 14 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் முதலைக்குடாஇ முனைக்காடுஇ கொக்கட்டிச்சோலைஇ ஆகிய பாடசாலை மாணவர்களும் இடம்பெறவுள்ளதாக பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி.வளர்மதி-ராஜ் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: