13 Mar 2014

தமிழ் பாடசாலைகளுக்கு மொழியில சுற்று நிரூபங்களை அனுப்பவும்- கி.மா.உ- பிரசன்னா

SHARE

(கமல்)
தமிழ் பாடசாலைகளுக்கு தனிச் சிங்கள மொழியில் சுற்று நிருபங்களை அனுப்புவதானால் பாடசாலை அதிபர்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர் இதனால் அவர்கள் தங்களது கடமைகளை சரிவர செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நிறுத்தி தமிழ் பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் சுற்று நிருபங்களை அனுப்பி வைப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற் கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா-இந்திரகுமார் அவர்கள் மத்திய அரசின் கல்வி அமைச்சருக்கு நேற்று புதன்கிழமை (12) கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்தாவது பட்டுள்ளதாவது.

தமிழ் சிங்களம் ஆகிய மொழிகள் இலங்கையில் அரச கரும மொழியாக அங்கிகரிக்கப் பட்டுள்ளது இதனை ஓருபுறம் வைத்துகக் கொண்டு சிங்கள மொழியில் தமிழ் பாடசாலைகளுக்கு சுற்று நிருபங்களை அனுப்புகின்ற செயற்பாடானது பொருத்தமற்றதாகவே கருதவேண்டியுள்ளது. மற்றும் நீங்கள் சிங்கள மொழிகளில் இவ்வாறு சுற்று நிருபங்கள், கடிதங்கள் அனுப்புகின்ற வேளையில்; தாங்கள் அறிவிக்கின்ற விடயத்தினை பாடசாலை அதிபர்கள் புரிந்து கொண்டு செயற்படுவதற்கு அல்லது அமுல்படுத்துவதற்கு காலதாமதத்தினை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

இதனால் எதிர் காலத்தில் கல்வி புலத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுடன் உங்களுது அமைச்சினால் முன்னெடுக்கப் படுகின்ற திட்டங்கள் குறிக்கோள்கள் அதனால் அடையாமலும் விடலாம் என்பனையும் கூறிவைக்க விரும்புகின்றேன். அதற்காக ஓர் அதிபர் ஆசிரியர் சிங்களம் கற்கக்கூடாது எற்பதற்கில்லை.

எனவே பிரஸ்தாப நிலையினைக் கருத்தில் கொண்டு இனிவருங்காலக்களில் நிற்சயமாக தமிழ் மொழியில் சுற்று நிருபங்கள், கடிதங்கள் என்பனவற்றை அனுப்பி வைப்பதற்குரிய பூர்வாங்க ஏற்பாடுகளை மேற் கொள்வதனூடாக தமிழ் பாடசாலைகளின் நிருவாக வேலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இத்தால் கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: