(சக்தி)
வெல்லாவெளி பிரதேசத்தினை சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று 13.03.2014 தும்பங்கேணி குளத்தினில்; அல்லிப்பூவினை பறிக்க சென்றவேளை நீரினில் மூழ்கி உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் வெல்லாவெளி கலைவாணி மகாவித்தியாலயத்தில் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஆனந்தன் அரவிந்தன் என்பவரே இச் சம்பவத்தில் உயிர் இழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
நேற்றயத்தினம் பாடசாலை முடிந்து நண்பர்களுடன் அல்லிப்பூ பறிப்பதற்காக தும்பங்கேணிக் குளத்திற்கு சென்றவேளை ஏனையவர்கள் குளக் கரையில் நிற்க குறித்த மாணவன் மாத்திரம் குளத்தினுள் இறங்கியுள்ளார். குளம் மிகவும் ஆழமாக காணப்பட்டதனால் நீரினுள் கால் எட்டமுடியாமல் தத்தளித்துள்ளர்.
நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியதாலேயே உயிரிளப்பு இடம் பெற்றுள்ளது மேலும் இவை தொடர்பாக வெல்லாவெளி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரேதம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்பு உறவினரிடம் பிரேதம் ஒப்படைக்கப்படும் எனவும் பிரேத பரிசோதனையின் பின்பே உயிரிழப்பின் விதம் பற்றி திட்டவட்டமாக கூறமுடியுமென களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம்-சுகுணன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment