21 Mar 2014

களுமுன்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா

SHARE
(சக்தி)

மட்டக்களப்பு- களுமுன்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழா மிகவும் சிறப்பான முறையில்  நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு நடைபெற்றது
இவ்வாலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா கடந்த புதன்கிழமை (12) ஆரம்பமாகிது.
நாளை மறுதினம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை  காலை 8 மணியளவில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
சுவாமி ஸ்நபன கும்ப பூசையும், கூட்டுப் பிரார்தனை நிகழ்வுகளும் இடம்பெற்று இரவு 7 மணியளவில் மூலாலய பூசையும், 8 மணியளவில் வசந்த மண்;டப பூசையும், இடம்பெற்று, முருகன் மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வயானை சமேதராயும், அம்பாள் இடப வாகனத்திலும்;, பிள்ளையார் மூசிக வாகனத்திலும், சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வந்து திருவிழா நடைபெற்றது.
கிரியைகள் நிகழ்வுகள் யாவும் உற்சவகால பிரதிஸ்டா பிரதம குரு சிவஸ்ரீ.செ.கு.சுப்பிரமணியம் குருக்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.









SHARE

Author: verified_user

0 Comments: