(வரதன்)
மட்.வின்சென்ற் தேசிய பாடசாலையில் கனிஷ்ட பிரிவில் சிறந்த பெறுபேறுகளையும், கடந்த ஆண்டு புலமைப் பரிசில்ப் பரீடசையில் திறமைகளை காட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் நேற்று (13) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணபிரதி தபால்மா அதிபர் வாசுகி அருள்ராஜா,
மட்டக்களப்பு கச்சேரியின் பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மண்முனை வடக்கு கல்வித் திணைக்கள அதிகாரி ஏ.சுகுமாரன், கிழக்கு மாகாண சர்வோதய இணைப்பாளர், இ.ல்.ஏ.கரீம்;, மட்டக்ளப்பு மக்கள் வங்கி பிரதி முகாமையாளர் என். உமாஜினி ஆகியோர் அதிதிகளாக கலந்த சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கல்வித் திணைக்கள அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இங்கு மாணவர்களின் கலையுணர்வை வெளிக்கொணரும் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment