3 Mar 2014

வாகரையில் 265 பேர் காணாமல் போனதாக பதிவு

SHARE
(மட்டு.சுரேஸ்)

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில்இ 1990 ஆண்டு முதல  2009 ஆம் ஆண்டு வரையான காலபகுதியில் அசாதாரண சூழ்நிலைக்காரணமாக இதுவரை 265 பேர் காணாமல் போனது பற்றிய பதிவுகள் பிரதேச செயலகத்துக்கு கிடைத்திருப்பதாக பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.

ஏற்கெனவே தாம் தமது பிரதேச செயலகப் பிரிவில் வாழும் குடியிருப்பாளர்களின் குடும்ப விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையைத் ஆரம்பித்து இருப்பதாகவும் அதன்போதே காணாமல் போனோர் பற்றிய விவரங்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றதாகவும் அவர் மேலும் கூறினார். 

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளின் கிழக்கு மாகாணத்திற்கான முதலாம் அமர்வு இம்மாதம் 20 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

அந்த விசாரணைகளின் ஒரு அமர்வு மட்டக்களப்பு வாகரையிலும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினர் மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம்; திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைஇ செங்கலடிஇ மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் பொதுமக்களுடன் நேரடியாக உரையாடி முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். 

SHARE

Author: verified_user

0 Comments: