(தர்ஷன்)
அம்பாறை மாவட்டத்தில் நற்பிட்டிமுனை பகுதியில் கிழக்கு இந்து ஒன்றியத்தின் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த கனராஜா என்பவரின் நிதி உதவியில் சேவோ அமைப்பின் மூலம் வறிய மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கிழக்கு இந்து ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், ஒன்றியத்தின் உப செயலாளருமான எஸ்.சரவணபவனின் ஏற்பாட்டின் கீழ் ஜேர்மனில் வசிக்கும் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த கனராஜா என்பவரின் நிதி உதவியால் வறிய மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சேவோ அமைப்பின் பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன் தலைமையில் சேவோ அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இவ் உதவிகளை வழங்கி வைத்தார்.
இந்நிழ்வில் கிழக்கு இந்து ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், ஒள்றியத்தின் உபசெயலாளருமான எஸ்.சரவணபவன், சேவோ அமைப்பின் பிரதிநிதிகள், உதவி பெறும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment