(கமல்)
மண்டூர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி கடந்த 25 அன்று வித்தியாலய மைதானத்தில் அதிபர் ந.புட்பமூர்த்தி தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந. புள்ளநாயகம் பிரதம அதிதியா கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு அதிதியாக ஆரம்ப உதவிக்கல்விப் பணிப்பாளர் பி. வரதராஜன் பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் அதிபர் க. நல்லதம்பி மண்டூர்-14 அ.த.க. பாடசாலையின் அதிபர் புஸ்பராசா மண்டூர்-13 விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் நேசராசா காக்காச்சிவட்டை விஸ்ணு வித்தியாலய அதிபர் தம்பிப்பிள்ளை மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவித்தனர். இப் போட்டியில் கம்பர் இல்லம் முதலாமிடத்தினையும் இளங்கோ இல்லம் இரண்டாமிடத்தினையும் வள்ளுவர் இல்லம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டது.
இதன்போது கலந்து கொண்ட அதிதிகள் வீரர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்குவதனையும் மாவணர்களின் அணிநடையினையும் இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment