பெரியகல்லாறு தபாலகத்தில் காணாமல்போன நிதி சம்மந்தமாக அதேதபாலகத்தின் தபாலதிபர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (16.02.2014) கைது செய்யப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இக் கைது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மட்டக்ளப்பு-பெரியகல்லாறு தபாலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிதி காணமல் போன சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையை அடுத்தே சந்தேகத்தின் பேரில் தபாலதிபரின் கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட தபாலதிபரினை களுவாஞ்சிகுடி நீதிமன்றில் பொலிசார் ஆஜர்படுத்திய வேளை இம்மாதம் 24 ம் திகதிவரை விளக்கமறில் வைக்குமாறு நீதவானின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைவாக குறித்த சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காணாமல்போன பணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களுவாஞ்சிகுடி பொலிசாரினால் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment