(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட்டக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் நேற்று (14) மகவும் சிறப்பான முறையில் ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இடம்பெற்றது.
சுவாமி உள்வீதி வெளி வீதி வலம் வந்து கடற்கரையில் சுவாமியினை வைத்து கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் எதிர் பாராத விதமாக அவ்விடத்தில் மாத்திரம் கடலலை மேலெளுந்து வந்து பக்தர்களையும் சுவாமியினையும், நனைத்தது.
இச்சம்பவம் மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளதாகவும், பல்லாண்டு காலமாக இவ்வாறு இந்த கடற்கரையில் தீர்த்தம் ஆடிவருவதாகவும் இதுபோன்ற சம்பவம் இவ்வருடம்தான் நடைபெற்றுள்ளதாகவும் பிள்ளையார் அருள் அனைவருக்கும் கிடைத்துள்ளதாகவும் ஆலய நர்வாகம் தெரிவித்தது..
இவ்வாலயத்தில் கடந்த கடந்த 6 ஆம் தகதி கொடியேற்றம் இடம்பெற்று இன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment