16 Feb 2014

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் வெள்ளிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

SHARE
  (கமல்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  ஞா. கிருஸ்ணபிள்ளைக்கு (வெள்ளிமலை) நேற்று  (14)  சுயீனம் காரணமாக கொழும்பு தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

அவருக்கு மிக அவசரமாக இருதய சத்திரசிகிச்சை நேற்யதினம் மேற்கொள்ளப் பட்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இருதய நோயினால் பாதிக்கப் பட்டிருந்த அவருக்கான சத்திரசிகிச்சையினை நோற்று (13) காலை 7 மணியளவில் ஆரம்பிக்கபட்டு சத்தரசிச்கை நேற்று இரவு 10 மணியளவில்மிகவும் திருப்திகரமான முறையில் நறைவடைந்துள்ளதாகவும் அவர் ஆராக்கயமாக உள்ளதாகவும் சிகிச்சையை மேற்கொண்ட சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு இருதய பிரச்சினை காரணமாக மட்டக்களப்புஇ கொழும்பு அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வெளியேறி இருந்தார். 
பின்னர் அவர் தனது வழமையான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இதன்பின்னர் மேற்கொண்ட சோதனையை அடுத்தே சத்திர சிகிச்சை அவசரமாக மேற்கொள்ளப் பட்டள்ளமை குறிப்பிடத் தக்கது

SHARE

Author: verified_user

0 Comments: