16 Feb 2014

மட்டக்களப்பிற்கு பெருமைசேர்த்தவர் பாலுமகேந்திரா

SHARE

மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த மனிதர் இந்தியாவிலோ அல்லது ஐரோப்பிய நாடுகளிலோ பிறந்து பெரும் செல்வாக்குடன் திகழ்பவர்கள் கூட சினிமாஉலகில் சாதிப்பதென்பதுவும் நினலத்துநிற்பதென்பதுவும் பலருக்கு முடியாத காரியமாக உள்ளநிலையில் எம் மண்ணில் பிறந்து தனதுமுயற்சியின் பலனாக மூன்றாம் பிறை தொடக்கம் சதிலீலாவதிஇ மறுபடியும் போன்ற மிகமாறுபட்ட விதத்தில் பலபடங்களின் இயக்குனராகவும் முள்ளும் மலரும் போன்றபடங்களில் ஒளிபரப்பாளராகவும் நிலைத்து நின்றுகாட்டியவர் அமரர் பாலுமகேந்திரா.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன்இ அவர்கள் பாலுமகேந்திரா அவர்களின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது



 ஒரேபாணியில் செல்லும் தமிழ் திரைப்படங்களின் மத்தியில் முற்றிலும் மாறுபட்ட சிந்திக்கத் தூண்டும் திரைப்படங்களை இயக்குவதுவே அமரர் பாலுமகேந்திராவில் தனித்தன்மையாகவும் அவரின் நிலைத்து நின்றமைக்கு காரணமுமாகும்.

அமரர் பாலுமகேந்திராவின் மறைவுசினிமாஉலகிற்கும்இஎம் இலங்கைதமிழ் சமூகத்திற்கும் குறிப்பாக மட்டக்களப்பிற்கும் பேரதிர்ச்சியும் இபேரிழப்புமாகும். 

தனதுபிறப்பின் பயனாக தனக்கென தனியிடத்தினையும்இ தனது குடும்பம்இ தான் பிறந்த மட்டக்களப்பிற்கும் கலைத்துறையினூடாக பெருமைசேர்த்தவர் என்றால் அதுமிகையாகாது இயக்குனர் பாலுமகேந்திராவின் குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன்இ அன்னாரின் ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திப்பதாக அன்னாரது செயற்பாடுகள் அனைத்தும் ஒவ்வொருகலைஞனுக்கும் பாலுமகேந்திராஓர் உதாரணம் எனவும் குறிப்பிட்டார் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: