27 Feb 2014

பட்டிப்பளைப் பிரதேசத்தினுள் இவ்வருடம் செய்கைபண்ணப்படவள்ள சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்பக்கூட்டம்

SHARE
(துசாந்தன்)

பட்டிப்பளைப் பிரதேசத்தினுள் இவ்வருடம் செய்கைபண்ணப்படவள்ள சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் கொக்கட்டிச்சோலையில் அமைந்துள் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளைப் பிரதேச கலாசார மண்டபத்தில் கடந்த செவ்வாய்கிழமை (25)  பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

இதில் இவ்வருடம் இப்பிதேசத்தினுள் சிறு போக நெற்செய்கையினை  மேற்கொள்ளவிருக்கும் வயல் நிலங்களின் அளவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டன.

அந்த வகையில் புளுகுணாவி குளத்தின் மூலம் 635ஏக்கரும்இ கடுக்காமுனை குளத்தின் மூலம் 675ஏக்கரும்இ அடைச்சல் குளத்தின் மூலம் 425ஏக்கரும்இ சேவகப்பற்று குளத்தின் மூலம் 28ஏக்கருமாகஇ இவ்வருடத்தில் இப்பிரதேசத்தினுள் மொத்தமாக  1763ஏக்கர் நிலத்தில் நெற்செய்கை இடம்பெறவுள்ளதாக இதன்போது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டன. 
சிறுபோக நெற்செய்கைக்கான வேலைகளை ஆரம்பிக்கும் திகதி 25.02.2014ம் திகதி எனவும் அறிவிக்கப்பட்டது. 

இதில் 03 மாத காலப்பகுதியை கொண்ட நெல் இனங்கள் பயிரிடுமாறும் 
சிறந்த நெல் இனங்களை தெரிவு செய்து பயிர்செய்கையில் ஈடுபடுவதுடன் சேதனை விவசாய செய்கையில் ஈடு படுமாறும் கமநல மற்றும் விவசாய திணைக்களங்களின் அதிகாரிகளினால் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன. 

குறைந்த வட்டியுடன் விவசாயிகளுக்கு கடன் வசதி வழங்க முடியும் இதில் கலந்து கலந்து கொண்ட வங்கி முகாமையாளர்கள் தெரிவித்தனர். 
இந்நிகழ்வில் உதவி மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ரங்கநாதன்இ பாரளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்இ கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மாவட்ட விவசாய பணிப்பாளர் உரச் செயலக உதவி பணிப்பாளர்இ பிரதி நீர்பாசன பணிப்பாளர்இ மற்றும் நீர்பாசன உத்தியோகத்தர்கள்இ பெரும்போக உத்தியோகத்தர்கள்இ விவசாய போதனாசிரியர்கள்இ கமநல பிரதிநிகள் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்இ வங்கி முகாமையாளர்கள்இ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: