(துசாந்தன்)
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நுண் கலைத்துறையின் இறுதி வருட மாணவர்களின் ஏற்பாட்டில் நுண்கலைத்துறைத் தலைவர் அவர்களின் தலைமையில் பட்டிப் பொங்கல் விழா நேற்று ( 05) கிழக்குப் பல்கலைக் கழத்தில் இடம்பெற்றது.
இதில் பல சம்பிரதாய நிகழ்வுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இந்தக் கலந்துiராயாடலின்போது “உள்ளுர் மாடுகளுக்கும், வெளிநாட்டு செயற்கை மாடுகளுக்கும் இடையிலான நன்மை தீன்மைகள்” பற்றி விவாதிக்கப் பட்டதோடு, இந்த விவாதத்தின்போது எடுத்துரைக்கபட்ட நன்மை தீமைகளை சமூகம் சார்ந்து கொண்டு செல்வது எனவும் பேசப்பட்டன.
உள்ளுர் கறவைப் பசுக்களை விருத்தி செய்வது பற்றி கிழக்குப் பல்கலைக் கழத்தின் 2 ஆம், 3 ஆம் வருட மாணவர்களினால் நிகழ்த்தப்பட்ட தெரு நாடகமும் இடம்பெற்றது.
இப்பாரம்பரிய நிகழ்வில் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக் மாணவர்கள், கலைஞர்கள், உள்ளுர் மாட்டுப் பண்ணையாளர்கள், பொதுமக்கள், என பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment