6 Feb 2014

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் காணப்படும் குறைபாடுகள் நிவர்தி செய்யப்படல் வேண்டும். பொதுமக்கள் வேண்டுகோழ்;.

SHARE
(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச சபையின் கீழ் நிருவகிக்கப்பட்டுவரும் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் அமைந்துள்ள துவிச்சக்கர வண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பு நிலையம் உரிய முறையில் அமைக்கப் படாமையினால் துவிச்சக்கரவண்டிகள் மற்றும், மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பாக வைக்க முடியாமலுள்ளதாக பொதுக்கள் அங்கலாய்க்கின்றனர்.

தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்லும் இச் சந்தைத் தொகுதியில் உரிய பாதுகாப்பு அரண் இன்மையினால் மர நிழல்களிலும், அங்கு அமைந்துள்ள குளக்கரையிலும், வெட்டை வெளியிலும் தமது துவிச்சக்கர வண்டிகளை நிறுத்திவிட்டுச் செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையின் வருடந்த குத்தகை வருமானம் 52 லெட்சம் ரூபாய், துவிச்சக்கர வண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பு நிலைய வருடாந்த குத்தகை வருமானம் 11 லெட்சம் ரூபாய், ஏனைய கடைகளின் வருடாந்த வாடகை 10 லெட்சம் ரூபாய், என சுமார் வருடாந்தம் 73 லெட்டசத்திற்குமேல் வருமானமீட்டும் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச சபை இதுவரையில் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தக்கருகில் முறையாகதொரு துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையத்தினை அமைக்காதுள்ளமை தமக்கு மிகுந்த மனக்கிலேசத்தனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோல் வருடாந்தம் முறையான வருமானத்தனை ஈட்டித்தரும் இந்த பொதுச்சந்தைக் கட்டிடமும் மிக நீண்ட காலமாக வர்ணப் பூச்சுக்களற்று பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும், இவ்வாறு களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைத் தொகுதியில் நிலவும் அடிப்படைப பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச சபை உரிய நடவடிக்கைகளை மிகவிரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பிரதேச பொதுமக்களும், வியாபாரிகளும், சந்தையில் தினமும் பொருட்கள் கொள்வனவு செய்யவரும் ஏனைய பொதுமக்களும், வேண்டுகோழ் விடுக்கின்றனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: