(கமல்)
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய கல்லாறில் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் பெரிய கல்லாறைச் சேர்ந்த தம்பிமுத்து மனோன்மணி (வயது 71) என்பவர் மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை (1) மாலை வீதியால் மேற்படி வயோதிபப் பெண் நடந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்திற்குள்ளானார்.
இதில் காயமடைந்த இவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும்இ இவர் மரணமடைந்துவிட்டதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளைஇ மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபரை கைதுசெய்து விசாரணை மேற்கொள்வதாகவும் பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment