10 Feb 2014

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்நோக்கிய பாதை வேலைத் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு

SHARE

 (சக்தி)
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்நோக்கிய பாதை வேலைத் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று நேற்றய தினம் ஞாயிற்றுக்கிழமை (09) அனுராதபுரத்திலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

2014 ஆம் ஆண்டு முன்நெடுக்கப் படவுள்ள முன்நோக்கிய பாதை வேலைத் திட்டங்கள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப் பட்டன்.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, பொலநறுவை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டக் கிளைக் காரியாலங்களைச் சேர்ந்த தலைவர், செயலாளர், பொருளார் மற்றும் கிளை நிறைவேற்று அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய உப தலைவர் பாரத ஜொனிக்குஹேவா அவர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

இதன்போது மேற்படி சங்கத்தின் மாவட்டக் கிளைகளின் கொள்ளளவுகளுக்கு ஏற்ப அந்த அந்த கிளைகளில் இவ்வருடம் (2014) முன்நெடுக்கப் படவுள்ள இரத்ததானமுகாம்கள், சிரமதானங்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள், மனிதாபிமான செயற்பாடுகள், முதலுதவி செயற்பாடுகள், அனர்த்த பதிலீட்டு நடவடிக்கைகள், தொடர்பாக விளக்கமளிக்கப் பட்டதோடு இலக்குகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும். 












SHARE

Author: verified_user

0 Comments: