(துசாந்தன்)
வேள்ட்விஷன் பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் (ADP) அனுசரணையுடன் பட்டிப்பளை பிரதேச கோட்டத்திற்கு உட்பட்ட கல்விப் பொதுத்தர சாதாரணதரப் பரீட்சைக்கு கடந்த 2013 டிசம்பரில் தோற்றிய மாணவர்களுக்கான விசேட செயலமர்வு உக்டா சமூக வள நிலையத்தில் நேற்று (25) இடம்பெற்றது.
இதில் 2013 டிசம்பர் கல்விப் பொதுத்தர சாதாரணத;திற்குத் தோற்றிய மாணவர்கள் உயர்தரத்தில் எவ்வாறன பாடங்களை தெரிவு செய்தல் வேண்டும்இ அதன் மூலம் இவ் நவீன உலகில் தொழில் சந்தைக்கு ஏற்ப எம்மை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள முடியும்இ என்பது தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்.ஞா.சிறிநேசன்இ பட்டிப்பளைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன்இ வேள்ட்விஷன் நிறுவன கல்வித்திட்ட இணைப்பாளர் இ.அமுதராஜாஇ மட்டக்களப்பு மேற்கு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.கரிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது மாணவர்களுக்கு பாடத்தெரிவு தொடர்பான விளக்கத்தை பிரதிக்கல்வி பணிப்பாளர். ஞா.சிறிநேசன் அவர்கள் வழங்கினார். இதில் பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment