(வராதன்)
மட்.கல்குடாவலயத்தின் விஷேட கல்விஅபிவிருத்தி தொடர்பான கூட்டம் கல்குடாவலயக் கல்விபணிமனையில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமானசி.சந்திரகாந்தன் தலைமையில் கடந்த 13 அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்குமாகாணகல்விஅமைச்சின் செயலாளர் ள.புஸ்பகுமாரஇ கிழக்கு மாகாணகல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஸாம் வலயக் கல்விபணிப்பாளர் ஸ்ரீகிருஸ்ணராஜா மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர்கள்இ முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அதிபர்கள்இ சேவைக்கால ஆலோசகர்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.
மிகநீண்டகாலமாக ஆசிரியர் தட்டுப்பாடுபாடு ஒழுங்கமைப்பு உள்ளிட்டவிடயங்கள் தொடர்பாக இதன்போது ஆழமாகஆராயப்பட்டது.
புதிதாகஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும் பின்னர் அவர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படுவது குறித்தும்இ தற்காலிக இடமாற்றம் போன்றவை தொடர்பாகவும் இதன் போதுவிஷேடமாக ஆராயப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment