(வராதன்)
மட்டக்கள்பு மாநகர சபையின் தூய்மை வாரத்தினை முன்னிட்டு மட் கள்ளியன்காடு இந்து மயானத்தில் மட்டு.மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்களின் தலைமையில் சிரமதானப் பணி கடந்த 13 அன்று முன்னெடுக்கப்பட்டது
நீண்ட நாட்களாக இவ்விடம் டெங்கு நுளம்புகளின் உறைவிடமாகக் காணப்பட்டதையடுத்து இப் பகுதிப் பொதுமக்களின் வேண்டுகோளின் பேரில் மட்டு. வரியிறுப்பாளர் சங்கம், வர்த்தக சங்கம், ஆகியவற்றின் அனுசரணையுடன் பாரிய சிரமதானப் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றன.
சிரமதானப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள மட்.வரியிறுப்பாளர் சங்கத்தினால் மட்டு. மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமாரிடம் இதன்போது கையளிக்கப்பட்டன.
இச்சிரமதானத்தின்போது கள்ளியங்காடு இந்து மயானம் துய்மைப் படுத்தப்பட்டதோடு, அப்பகுதியில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாய் இருந்த இடங்களும் அடையாளம் காணப்பட்டு புணரமைப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதகும்.
0 Comments:
Post a Comment