20 Feb 2014

மட்- வின்சென்ற் தேசிய பாடசாலையின் இவ்வாண்டின் அபிவிருத்திக்கான ஒன்றுகூடல்

SHARE
(வரதன்)

மட்- வின்சென்ற் தேசிய பாடசாலையின் இவ்வாண்டின் அபிவிருத்திக்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (19) மட்.வின்சென்ற் தேசிய பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலையில் அதிபர் திருமதி.ராஜகுமாரி –கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள் அபிவிருத்திச் சங்கத்தினர், ஆசிரியர்கள் பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்

இதன்போது பாடசாலை அதிபரினால் கடந்த ஆண்டு பாடசாலையில் மாணவர்களின் கல்வி, விளையாட்டு, பரீட்சைப் பெறுபேறுகள், அபிவிருத்தித் திட்ட முன்னெடுப்புக்கள், பற்றியும் தற்போதுள்ள முக்கிய தேவைப்பாடுகள் குறித்து முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் அன்றாட கற்றல் செயற்பாடுகளின் முன்னேற்றம் பற்றி கூடிய கவனம் செலுத்துவதுடன், கணணி கையடக்கத் தொலைபேசி பயன்பாடு பற்றி விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் பாடசாலையில் அதிபரினால் பெற்றோர்கள் மத்தியில் விரிவாக குறிப்பிடப்பட்டன.






SHARE

Author: verified_user

0 Comments: