(மா.சசி)
மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் சிறுவர் நிதியத்தின் பங்காளி நிறுவனமான வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் கீழ் உள்ள கிராம மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழக்களை வலுவூட்டுவதற்கான பயிறிசிப்பட்டறை கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று (01.02.2014) நிறைவு பெற்றது.
மண்முனை மேற்குப் பிரதேச செயலாளரும் பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுத் தலைவருமாகிய வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இப் பயிற்சிப்பட்டறையில் ஆறு கிராம மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழக்களுக்கு இப் பயிற்சிப் பட்டறை இடம்பெற்றது.
இப் பயிற்சிப் பட்டறையில் சிறுவர் நிதியத்தின் திட்ட அதிகாரி டி.ஜீ.சபாஸ், மண்முனை மேற்குப் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் த.பிரபாகரன், இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் மா.சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment