சக்தி)
இலங்கையிலே 6000 யானைகள் உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளன. அவற்றில் அதிகமான யானைகள் மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ளன அதிலும் இம்மாவட்டத்திலுள்ள வகைரைப் பிரதேசத்திலும் தொப்பிக்கல பிரதேசத்தலும் கூடுதலான யானைகள் இருக்கின்ற. இவைகளைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் தற்போது திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
என மீழ் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி-முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்விடம், பயிர்செய்கைப் பிரதேசங்களில் காட்டு யானைகளின் தாக்கங்களை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்கிழமை (25) மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேச செயலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்த கருத்து தெரிவிக்குகையில்
மட்டக்களப்பு மாவட்டத்திலே 8 பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் தெல்லைகள் இருந்து வருகின்றன. இதனைவிட மக்களின் செயற்பாடுகளினாலும் கிராமங்களுக்குள் யானைகளின் வரவு அதிகரிக்கின்றன. இவற்றுக்காக வேண்டி மக்களின் ஒத்துழைப்புடன் மின்சார வேலிகள் அமைக்கும் திட்டம் மிகவிரைவில் ஆரம்பிக்கப் படவுள்ளன.
இதனைவிட ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்சார வேலிகளைப் புணரமைப்புச் செய்யப்படவுள்ளன. தற்போதும் யானைகள் கிராமங்களை அண்டிய காட்டுப்பகுதியில் தங்கி நிற்கின்றன. அவற்றினையும் விரட்டுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையிலே 6000 யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றில் அதிகமாகன யானைகள் மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ளன அதிலும் மட்டு மாவட்டத்திலுள்ள வகைரைப் பிரதேசத்திலும் தொப்பிக்கல பிரதேசத்தலும் கூடுதலான யானைகள் திரிகின்றன. இவைகளைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் தற்போது திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
யானைகளை கொல்லவோ அல்லது துன்பறுத்தவோ முடியாது அது ஒரு பெரிய பிராணி அதனால் வரும் சேதத்தலிருந்து மனிதர்களாகிய நாம் தப்பிக்கொள்ள வேண்டும்.
சிங்களப் பிரதேசத்திலிருந்து யானைகளைக் கொணர்ந்து எமது மக்கள் வாழும் பிரதேசங்களில் விட்டுச் சென்றுள்ளார்கள் என தவாறான கருத்துக்கள் நிலவும் இவை அனைத்தும் முற்றுமுழுதாக தவறான விடையமாகும்.
ஒரு யானை ஒரு நாளைக்கு 60 கிலோமீற்றர் தூரம் நடக்கும் ஆகவே யானைகள் இங்கிருந்து அம்பாரை பிரதேசத்திற்குச் செல்லும் அதுபோல் பொலநறுவைப் பகுதியிலிருந்து எமது பிரதேசங்களுக்கு யானைகள் ஊடுருவும். எனவே தற்போது முற்றுமுழுதாக மட்டக்களப்பு மாவட்டத்தினுள் காட்டு யானைகளின் தாக்கங்களிலிருந்து விடபடுவதங்கான வேலைத் திட்டங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதற்காக அதிகளவு நிதி ஒதுக்கீடுகள் செய்யப் பட்டுள்ளன. இதுபோல் வெல்லாவெளி பிரதேசத்திற்கு மாத்திரம் 116 மல்லியன் ரூபா நிதி உட்கட்டுமாக வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு வந்துள்ளது.
உன்னிச்சை குடிநீர் திட்டத்தினை வெல்லாவெளி பிரதேசத்தின் பழுகாமம் வரைக்கும் கொண்டு வருவதற்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறு குளங்களின் புணரமைப்புக்கென 460 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன
மட்டக்களப்பு மாட்டத்தின் அபிவிருத்திக்கென அதிகளவான நிதி வந்துகொண்டிருக்கின்ற. அபிருத்தித்திகளும் மாவட்டத்தின் நாலாபக்கமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவைகள் இருந்தலும் உயிர் பாதுகாப்பு என்பதுதான் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. அதற்காக வேண்டி மிகவிரைவில் யானைகளின் தொல்லைகளைக் கட்டுப்படுத்தலாம். அவற்றுக்கு இயற்கையான முறையாக பனைமரங்களையும் நடலாம்.
யானைகளின் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க பிரதேச செயலகங்களுக்கு நிதி நிதி ஒதுக்கீடு செய்யப்படடுள்ளன. 15000 ரூபாய் உடனடியாக வழங்கப்படும்.குறைந்தது 3 மாதங்களுக்குள் மக்களுக்கு சகல இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும் என சட்டமாக்கப் பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புக்கள் தேவை இது அரசியல் பிரச்சனை அல்ல பொதுவான பிரச்சனையாகும். யானைக்கு கட்சி போதம் தெரியாது எந்தக் கட்சியினர் சென்றாலும் யானை தாக்கும் எனவே அனைவரும் கட்சி பேதங்கள் மறந்து செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment