4 Feb 2014

3 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது

SHARE
 (வரதன்)

வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அரசாங்கத்திற்கு வேண்டுகோளை விடுத்து வருகின்றார். ஆனால் இராணுவமோ அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது' என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன் கடந்த திங்கட்கிழமை (3) தெரிவித்தார். 
மட்டக்களப்பு வாகரை பிரதேசம் புனானை கிழக்கில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்இ
எமது அமைச்சினால் 3 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சம்பூர் போன்ற இடங்களில் இராணுவத்தினர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளைக் கட்டிக் கொடுத்து மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ஒன்றினைந்து மக்களுக்காக வேலை செய்வோம் வாருங்கள் என்று  அழைப்பு விடுத்திருந்தேன. ஆனால் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி எனக்கு மீள்குடியேற்ற அமைச்சுப் பதவி வழங்கும் போது விநாயகமூர்த்தி முரளிதரனை பிரதி அமைச்சராக நியமித்தார்.

அதற்காக ஜனாதிபதிக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் விநாயகமூர்த்தி முரளிதரன்  வடக்கு கிழக்கைப் பற்றி நன்கு அறிந்தவர். அதனாலேயே அவரிடம் இப்பகுதிகளுக்கான முக்கிய பணிகளை ஒப்படைத்துள்ளேன். இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 4000 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் யாவும் இவரிடமே ஒப்படைத்துள்ளேன்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: