( மௌசும்)
மக்களின் அடிப்படைத் தேவைகளை இனம்கண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை எமது கிழக்கு கிழக்கு மாகாண விவாசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. என மேற்படி கிழக்குமாகாண அமைச்சின் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான அல் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு-ஏறாவூர் மிச்நகரில் 250 மீற்றர் நீளமான கொங்கிரீட் பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று (16) ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்தப்பேரழிவு, மற்றும் சுனாமி ஆகியவற்றில் துன்பங்களை சந்தித்த மக்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்க நான் இயன்ற வரை முயற்சி எடுப்பேன்.
எதிர்வரும் காலங்களில் இது போன்ற பல்வேறு வீதிகளை அபிவிருத்தி செய்து தருவதற்கான சகல முயற்சிகளையும் எடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவாசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான அல் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜெய்க்கா திட்டத்தின் உதவியுடன் ஏறாவூர் மிச்நகரில் 250 மீற்றர் நீளமான கொங்கிரீட் பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று (16) ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பொதுநல ஸ்தாபனங்கள் பாடசாலைகள் பள்ளிவாயல்களின் முக்கியஸ்தர்கள் அப்பிரதேச பொதுநல அமைப்புக்கள் இணைந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் விடுத்த தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து அமைச்சர் இந்த நிதிஉதவியினை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபை உறுப்பினர் பெரோஸ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், ஏறாவூர் தபால் நிலைய அதிபர்; நசீர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மகளிர் அமைப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment