(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஓந்தச்சிமடம் 116 வீட்டுத் திட்டத்திற்கு குடிநீர் வழங்கும் குடிநீர் கிணற்றுக்கு அருகில் நிலம் சுமார் 5 தொடக்கம் 6 அடிவரை நேற்று காலையில் (15) தாழ் இறங்கியுள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றர்.
இவ்விடத்திற்கு விரைந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு-நடராச நிலமையினை அவதானித்துள்ளார்.
குடிநீர் கிணற்றுக்கு அருகில் நிலம் தாழிறங்கியுள்ளதனால் தாழிறங்கிய பகுதியினூடாக நீர் மெலெழுந்துள்ளது.
இச்சம்பவம் தொர்பில் களுவாஞ்சிகுடி பகுதியின் நீர்பாசன சபையின் பொறியியலாளர், மண்முனை தென் எருவில் பற்று பரதேச சபையின் செயலாளர், பிரதேச செயலாளர், பொதுச் சகாதார பரிசோதகர், கிராம சேவை உத்தியோகஸ்தர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்காலிகமாக இக்கிணற்றிலிருந்து இப்பிரதேச மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரினை இடைநிறுத்தி மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபையின் மூலம் இப்பகுதி மக்களுக்கு வவுசர் மூலம் குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக மேற்படி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராச தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment