மட்டக்களப்பு மாவட்டத்தின்-கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட அக்குறானை பாரதி வித்தியாலயத்திற்குதிய 5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட புதிய பாடசாலைக் கட்டிடம் நேற்று (21) திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் சி.சிவனேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கட்டிடத்தினைத்திறந்து வைத்தார்.
கடந்த 01.06.2011 அன்று முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதே இந்த அக்குறானை பாடசாலைளயாகும்.
மிக நீண்ட தூரம் பயணித்து அக்குறானை பிரதேச மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலையிலையே காணப்பட்டு வந்தன.
1999ம் ஆண்டு தொடக்கம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் புதிய பாடசாலை திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெறாமல் இருந்து வந்துள்ளது.
அதன்பின்னர் முன்னாள் முதலமைச்சரின் முயற்சியின் பலனாக கடந்த 2011ஆம் ஆண்டு இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்று கடந்த 01.06.2011 அன்றய தினத்திலிருந்து பாடசாலை முதலாம் தரத்தில் ஆரம்பிக்கப்பட்டு தந்போது நான்காம் தரம் வரை இப்பாடசாலை இயங்கி வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
இந்நிலையில் 5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட புதிய பாடசாலைக் கட்டிடம் மாணவர்களின் பாவனைக்கு நேற்று உத்தியோக பூவமாகத் திறந்து விடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமாக சி.சந்திரகாந்தன கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ கிருஸ்ணராஜா பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி.குலேந்திரராஜா முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கோட்டக் கல்வி பணிப்பாளர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை இப்பாடசாலையில் நேற்றயத்தினம் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது. இந்நிகழ்விலும் பாடசாலைக்கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட அதிதிகள் கலந்து சிறைப்பித்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment