21 Jan 2014

வித்தியா சஞ்சிகை வெளியீடும் ,சிறுவர் திறன் வெளிப்பாடு நிகழ்வும்

SHARE
 (வரதன்)
மட்டக்களப்பு வலயக்கல்வி கல்வி அலுவலக்கத்தின் ஏற்பாட்டில்  மட்.வின்சென்ற் தேசிய பாடசாலையில் வலயக் கல்வி பிரதிப் பணிப்பாளர் திருமதி சி.கங்கேஸ்வரன் தலைமையில் இச்சஞ்சிகை வெளியீடும் நிகழ்வு இன்று (21) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சி.சிவநிர்த்தானந்தா, முன்னாள் வலயக்கல்வி கல்வி பணிப்பாளர் ச.மாணிக்கராஜா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம கணக்காளா திருமதி வ.கணேஷமூர்த்தி, மற்றும் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் கல்விமான்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் தலைமையுரையினை நூலாசிரியர் த.யுவராஜன் அவர்களும், சஞ்சிகையின் வெளியீட்டு உரையினை திருமதி சி.கணேசலிங்கம் அவர்களும், சஞ்சிகையின் விமர்சன உரையினை முன்னாள் அதிபர் மு.இராசரெத்தினம் அவர்களும் நிகழ்ததினர்.

இந்நிகழ்வின் சஞ்சிகையின் முதற் பிரதியினை கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சி.சிவநிர்த்தானந்தா அவர்களிடமிருந்து முன்னாள் வலயக்கல்வி கல்வி பணிப்பாளர் ச.மாணிக்கராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில் சிறுவர் திறன் வெளிப்பாடு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.   








SHARE

Author: verified_user

0 Comments: