(கமல்)
திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தினால் தைப் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு திருப்பழுகாமம் திரௌபதியம்மன் ஆலய முன்றலில் பொங்கல் பொங்கி விசேட பூiஜை ஆராதனைகள் நடைபெற்றதோடு திருப்பழுகாமம் பாஞ்சாலி கலைக் கழத்தினரால் “தமிழ் பண்பாட்டில் தை;திருநாள் எனும்” எனும் தலைப்பில் கவிஅரங்கும் நடைபெற்றது.
இக்கவியரங்கில் கவிஞர்களான கோவிலூர் தணியகாசலம், சேரலாதன், ரமேஸ்வரன், மகேந்திரன் ஆகியோர் கவி பாடியதோடு பொரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தின் பிரதம குருவும் கவிஞருமான விஸ்வப்பிரம ஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் அவர்கள் இதற்கு நடுவனம் புரிந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் அமைந்துள்ள திருப்பழுகாமம் இந்து கலாமன்றம் நடாத்தும் வருடாந்த பொங்கல் விழா நேற்று (25) திரௌபதியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது. இதன்போதே இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்து கலாமன்றத் தலைவர் த.குகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆத்மீக அதிதிகளாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள், பொரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தின் பிரதம குரு விஸ்வப்பிரம ஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்கள், திருப்பழுகாமம் திரௌபதியம்மன் ஆலய நம்பியார் மா.கு.தட்சணாமூர்த்தி, அவர்களும், பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், அவர்களும் விசேட அதிதிகளாக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், ஞா.கிருஷ்ணபிள்ளை, அவர்களும்,
சிறப்பு அதிதிகளாக களுவாஞ்சிகு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், மாவட்ட மேலதிக பதிவாளர் அ.பேரின்பநாயகம், அகியோர் கலந்து கொண்டதோடு, கலாசார உத்தியோகஸ்தர்கள், பாடசாலை அதிபரடகள், பாடசாலை மாணவர்கள், இந்து காலா மன்றத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் இந்து கலா மன்றத்தினரால் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி தெ.சுப்பிரமணியம், அதிபர் க.கனகசூரியம், மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி முதல்வர் த.மகாலிங்கம், ஆகியோருக்கு பொன்னாடை போர்தி கௌரவிக்கப் பட்டனர். இதில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடமபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment