19 Jan 2014

வவுணதீவில் வாழ்வகம் அமைப்பினால் நடாத்தபட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா

SHARE
 (கமல்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள வவணதீவு வாழ்வகம் அமைப்பினால் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று (18) மட்.பரமேஸ்வரா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
வாழ்வகம் அமைப்பின் தலைவர் சோ.புவிசாஜசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மட்டகளப்பு மாவட்ட இணைப்பாளர், அருண் தம்பிமுத்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வி.தவராசா, மட்டக்களப்ப மாவட்ட சமூகசேவை உத்தியோகஸ்தர் சா.அருள்மொழி, மற்றும் பவுணதீவு பொலிஸ் நிழலயப் பொறுப்பதிகாரி வவுணதீவு பிரதேச மாற்றுத்திறனாளிகள் என பலர் இத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சுமார் நூற்றுக்குமேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இத்தில் கலந்து கொண்டோருக்கு போர்வைகள் (வெட்சீட்) குடை, போன்ற பொருட்கள் வளங்கப்பட்டன. 







SHARE

Author: verified_user

0 Comments: