பிரேசில் நாட்டில் கடலில் குடும்பத்துடன் குதூகலமாக குளிக்க சென்றபோது மின்னல் தாக்கிய் ஒரு பெண் தன் கணவர் மற்றும் மகனின் கண்முன்னே உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்த Rosangela Biavati என்ற 36 வயது பெண் தனது கணவர் மற்றும் 11 வயது மகனுடன் coast of Sao Paulo என்ற கடற்கரையில் குளிக்க சென்றார். அப்போது புயல் வருவது போன்ற தோற்றம் தெரிந்ததால் உடனே கடலில் குளித்துக்கொண்டிருந்த தனடு 11 வயது மகனை கடலில் இருந்து வெளியேறும்படி எச்சரிக்கை செய்ய கடலுக்குள் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் ஒன்று அவர் தலையில் மீது இறங்கி சம்பவ இடத்திலெயே அவர் பலியானார். இது அவரது கணவர் மற்றும் மகன் கண்ணெதிரிலேயே நடந்ததால் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பின்னர் உறவினர்களும், கணவரும் சேர்ந்து அந்த பெண்ணின் உடலை வெளியே கொண்டுவந்தனர். இந்த காட்சியை சற்று தூரத்தில் இருந்து அவருடைய உறவினர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது அனைத்து ஊடகங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் கடலில் இதுபோன்று அடிக்கடி மின்னல் மற்றும் இடி விழுந்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment