(துவாரகன்)
மட்.குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் கீழ் இயங்கி வருகின்ற “சமூகமேம்பாட்டு மையத்தினால்” களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் மிகவும் வறிய நிலையிலிருந்து கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு பாடசாலைப் பை, கொப்பிகள், போன்ற ஒரு பிள்ளைக்கு 2000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரங்கள் 50 பிள்ளைகளுக்கு நேற்று (30) களுவாஞ்சிகுடி பிரதேச செயலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.
சமூகமேம்பாட்டு மையத்தின் தலைவர் கே.ஞானராச அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.சிவகுமார், சமூகமேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் உட்பட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் கீழ் இயங்கி வருகின்ற சமூகமேம்பாட்டு மையத்தினால் கருவாஞ்சிகுடி பிரதேசத்திதள்ள வறிய மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்கு கடந்த காலங்களிலிருந்து உதவி வருவதாகவும், இதுபோன்ற செயற்பாடுகள் மென்மேலும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், சமூகமேம்பாட்டு மையத்தின் செயலாளர் துவாரகன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment