(வரதன்)
மட்டக்களப்பு மஞ்சந்டுவாய் உப தபால் நிலையம் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணப்பெட்டி உட்பட பல பொருட்கள் வெளியே வீசி எறியப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.மங்கள தெரிவித்தார்.
தபால்நிலைய அதிபர் குறித்த தபால் நிலையத்தை வழமை போன்று செவ்வாய்க்கிழமை மாலை மூடிவிட்டு நேற்று புதன்கிழமை (22) காலை திறப்பதற்காக வந்து பார்த்தபோது தபால் நிலையம் உடைக்கப்பட்டுள்ளமையை அறிந்து கொண்டுள்ளார்.
பின்னர் இதுதொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அத்தியட்சகர் எம்.ஐயாதுறை தெரிவித்துள்ளார்.
குறித்த தபால் நிலையத்தில் பணம் வைப்பில் இல்லாமையால் பணம் கொள்ளையிடப்படவில்iயென குறித்த தபால் நிலையத்தின் அதிபர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதே தபாலகம் கடந்த 2012ஆம் ஆண்டு இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் நேற்று இனந்தெரியாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment