19 Jan 2014

திருமணமான மூன்றே மாதத்தில் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட பாலஸ்தீன கைதி ஒருவரின் விந்தணுவை யாருக்கும் தெரியாமல் கடத்தி அவரது மனைவி குழந்தை பெற்ற விவகாரம் இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 29 வயது அல்-ஹசன் என்பவருக்கு ஹனா அல்-சானின் என்ற 26 வயது பெண்ணுடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான மூன்றே மாதத்தில் அல்-ஹசன் இஸ்ரேல் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு 12ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருக்கும் கணவனை சந்திக்க ஹனா அல்-சானிஎவ்வளவோ முயற்சி செய்தும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே அவர் கணவரின் விந்தணு மூலம் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்தார். 

கணவர் இருக்கும் சிறையில் விடுதலையாகப் போகிற ஒருவருடன் தொடர்பு கொண்டு, தனது கணவரின் விந்தணுவை கடத்தி வரும்படியாக அவர் தனது நம்பிக்கையான ஒருவருடன் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்து அனுப்பினார். அதன்படி விடுதலையான அந்த நபர்  
ஹனா அல்-சானின் கணவனின் விந்தணுவுடன் வெளியே வந்தார். உடனடியாக லேப்பில் வைத்து அந்த விந்தணுக்கள் பாதுகாக்கப்பட்டது.

அதன்பின்னர் 
ஹனானின் கருப்பையில் அந்த விந்தணுக்கள் செலுத்தப்பட்டு செயற்கை முறையில் கருவூட்டப்பட்டது. இதனால் கர்ப்பிணியாகிய ஹனான் நேற்று முன் தினம் அழகான ஆண்குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.

1967ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 750,000 பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்கும் இதுபோல குழந்தை பிறக்கவைக்க பாலஸ்தீனத்தில் ஒரு இயக்கமே மறைமுகமாக வேலை செய்து வருவதாகத் தகவல்.(wu- tp)



SHARE

Author: verified_user

0 Comments: