மட்டக்களப்பு-திருமலை வீதியிலுள்ள சிகரம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் தே.ஜெயராஜனின் வீட்டு சிவிங்க்குள்ளிருந்து (அண்டசீற்) நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19 )வீழ்ந்த கைக்குண்டை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீட்டில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வீட்டின் அண்டசீற் கழற்றப்பட்ட போதே உள்ளே இருந்து கைக்குண்டு வீழ்ந்துள்ளது.
வீட்டு உரிமையாளர் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்ற அனுமதியினை அடுத்து கைக்குண்டைமீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் தற்போதைய உரிமையாளர் இந்த வீட்டை 2012 ஆம் ஆண்டே கொள்வனவு செய்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக தெரிவித்த பொலிஸார் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment