(வரதன்)
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாவட்ட இளைஞர் அமைப்பினால் வறிய மாணவர்கள் 52 பேருக்கு கற்றல் உபகரணங்கள் ( பென் பென்சில், அப்பியாசக் கொப்பிகள்) வழங்கும் நிகழ்வு மட்.வலையிறவு மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் க.சுஜான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டு. மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் அருண் தம்பிமுத்து , மற்றும் கட்சிய் மாவட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டு. மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் அருண் தம்பிமுத்து அவர்கள் கருத்து தொரிவிக்குகையில்..
ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை தெரிவு செய்து அபிவிருதிகள் முன்னெடுக்கப் பட்டவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment