(கமல்)
மட்டக்களப்பு-களுதாவளை சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் பொலிஸ் நடாமாடும் சேவை மற்றும் வைத்திய சேவையும் நேற்று (25) களுதவனை மட்.சாந்திபுரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மேற்படி சிவில் அமைப்பின் தலைவர் திசவீரசிங்கம்-பிரமதாச அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர், களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரெத்நாயக்க, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்திட்சகர் குணசிங்கம்-சுகுணன், மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின்போது களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் குடும்ப மற்றும் எல்லைப்பிரச்சனைகள் தொடர்பான பிணக்குகள் விசாரிக்கப் பட்டதோடு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையினரினால் இப்பிரதேசத்தினைச சேர்ந்த நோயளிகளுக்கும் சிகிச்சைகள் அதே இடத்தில் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment