(துசாந்தன், வரதன்)
மட்டக்களப்பு றெட்டறிக் கழகமும் பட்டிப்பளைப் பிரதேச பொது சுகாதார வைத்திய அலுவலகமும் இணைந்து நடாத்திய “தொற்றாத நோய்களுக்குரிய” மாபெரும் நடமாடும் இலவச வைத்திய முகாம் இன்று (26) மட்.முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பட்டிப்பளைப் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்களான இராஜேந்திரா, மயூரன், ரதீசன், இ.என்.ரி. வைத்தியர் கிரிதரன், மற்றும் பெண் நோயியல் வைத்திய நிபுணர் சங்கரதாஸ் அறுவைச்சிகிச்சை நிபுணர் தம்பாவெட்ட ஆகியோர் உட்பட்ட பல வைத்தியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச வைத்திய ஆலேசனைகளையும் சிகிச்சைகளையும் வழங்கினர்.
“தொற்றாத நோய்களுக்குரிய” இவ்விலவச வைத்திய முகாமில் சுமார் 500 இற்கு அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்ததாக பட்டிப்பளைப் பிரதேச பொது சுகாதார வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது
0 Comments:
Post a Comment