1 Feb 2014

யுத்ததினால் பாதிகக்பட்ட இடங்களை அபிவிருத்தி செய்து வருகின்றேன்.

SHARE
 (கமல்)

எனது சொந்தப் பிரதேசத்தினை விட்டு விட்டு நான் வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி ஆகிய நான்கு பிரதேசங்களுக்குரிய அபிவிருத்திக் குழுத் தலைவராக இருக்கின்றேன். 

இந்த நோக்கம் என்ன வென்றால் கடந்த காலங்களில் இந்த நான்கு பிரதேசங்களும்தான் யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததும், யுத்தத்திற்கு போராளிகளை அள்ளி வழங்கியதும் இப்பிரதேச மக்கள்தான். 

அடுத்தது இந்தப் பிரதேங்கள் அடங்கியுள்ள பகுதி தனித் தமிழ் தொகுதியாகும். 
அந்த அடிப்படையில்தான் இந்த பிரதேசங்களைத் தெரிவு செய்து தற்போது அபிவிருத்தி செய்து வருகின்றேன். 

என மீழ் குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயக மூர்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று (30.01.0214) மட்.முனைத்தீவு சக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில். 
பட்டிருப்பு தொகுதி மக்கள் நினைத்தால் எதிர் காலத்தில் 3 பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கலாம்.

அந்த வகையில்தான் இந்த தொகுதியில் பல்வேறுபட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர் காலத்திலும் பல அபிவிருத்திளை மேற்கொள்ளத் திட்டமிடப் பட்டுள்ளன. இவைகளனைத்திற்கும் கல்விச் சமூகம் மிகவும் உந்துசக்தியாக இருக்க வேண்டும்.

பல்கலைக்கழக் விரிவுரையாளர்களை நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் வளப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும். இதனை விடுத்து கல்வியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளிடையே தனிப்பட்ட விரோ குரோத செயல்களைக் காட்டக் கூடது, அவ்வாறு காட்ட வெளிக்கிட்டால் எமது தமிழ் சமூகம் எவ்வாறு மென்மேலும் முன்னேறுவது. எனத் தெரிவித்த பிரதியமைச்சர் 
கிழக்குப் பல்கலைக் கழகம் என்பது மட்டக்களப்பு மக்களுக்குரியது. அதிலே உபவேந்தராக மட்டக்களப்பான்தான் இருக்க வேண்டும். அங்கு தற்போது இருக்கின்ற உபவேந்தரை மிகவும் கஸ்ட்டத்தின் மத்தியில்தான் கொணர்ந்து அவரைக் கொண்டு தற்போது கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். 

எனவே எதிர் வரும் காலங்களில் வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் மற்றும் கல்விச் சமூகம் என நாங்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் எமது பலத்தினை நிருபிக்க வேண்டும்.எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: