கல்வி அமைச்சின் விஷேட சுற்று நிருபத்துக்கு அமைய தேசிய மீலாதுன் நபி தின விழா நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதற்கமைவாக காத்தான்குடி அல்-ஹிறா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய மீலாத் நபி தின நிகழ்வு வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம்.சி.எம்.சத்தார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுபைர், ஐ.எஸ்.ஏ.பரீட், காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலய கலாசாரக் குழு செயலாளர் ஏ.எம்.எம்.பாயிஸ் (இஸ்லாஹி) உட்பட ஆசிரிய,ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு விஷேட உரையினை அஷ்ஷேய்க் நுஸ்ரி சித்தீக் நளீமி நிகழ்த்தினார்.
இதன்போது மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் இஸ்லாமிய பாட்டு, நாடகம், பேச்சு என பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment